Thursday 11 April 2024

27 பிரசவங்களில் 69 குழந்தைகள் பெற்று சாதனை செய்த சிங்க பெண்


     சாதனைகள் பலவகைபடும். சில சாதனைகள் குறுகிய காலத்தில் முரியடிக்கபட்டுவிடும். சில சாதனைகள் எந்த காலத்திலும் முரியடிக்கப்படாமலே இருக்கும். அப்படி ஒரு சாதனையாகத்தான் குழந்தைகளை அதிகம் பெற்று சாதித்த சில தம்பதிகள் இருக்கிறார்கள். ஆஸ்ட்ரேலியாவை சேர்ந்த பிஎடேர் வாசில்யேவ்  என்பவருடைய முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் மொத்தம் 69. இத்தனை குழந்தைகள் பிறந்த இடைப்பட்ட காலம் எவ்வளது தெரியுமா? வெறும் 40 வருடம் இடைவெளியில் தான். அதாவது 1725 முதல் 1765 வரை. மொத்தம் 27 பிரசவம் மூலம் 69 குழந்தைகள் பிறந்தன. எல்லா பெண்களுக்கும், ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை தான் பிறக்கும் என்றால், இந்த பெண்மணிக்கு 27 பிரசவங்களில் ஒன்றில் கூட ஒரு குழந்தை பிறக்கவில்லை என்பது ஆச்சரியம். 

     எல்லா பிரசவதிலுமே 2,3,4, என குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 16 பிரசவங்களில் 2 குழந்தைகளாக பெற்றுள்ளார். இதன் மூலமே 32 குழந்தைகள் பிறந்துவிட்டன. 7 பிரசவத்தில் 3 குழந்தைகள் வீதம் 21 குழந்தைகளும், 4 பிரசவத்தில் 4 குழந்தைகள் வீதம் 16 குழந்தைகளும், ஆக மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த சாதனையை எந்த பெண்ணும் இது வரை முறியடிக்கவில்லை. அதிக குழந்தைகள் பெற்றதோடு மட்டும் இவருடைய சாதனைகள் நின்றுவிட வில்லை. உலகிலேயே மிக அதிகமாக இரட்டை குழந்தை பெற்றேடுத்ததிலும், அதிகமாக முறை 4 குழந்தைகளை பெற்றேடுததிலும் சிறப்பு பெறுகிறார்.

 

     ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தது யார் என்று பார்த்தால், அந்த பெருமை அமெரிக்காவில் உள்ள நடேய சுலைமான்க்கு போகிறது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் இவருக்கு பிறந்தன. அதில் 6 ஆண் குழந்தைகள் 2 பெண் குழந்தைகள். கலிபோர்னியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் இந்த குழந்தைகள் பிறந்தன. நடேயாவுக்கு மொத்தம் 14 குழந்தைகள்.

     மலைசியாவை சேர்ந்த சுரேனா மட்சாட் என்ற பெண்ணுக்கு 1999 ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. ஆனால் இந்த குழந்தைகள் 6 மணி நேரம் கூட உயிருடன் இல்லை. இது தான் ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்ததற்கான சான்று. 

     சரி பெண்களில் அதிக குழந்தைகள் பெற்றவர்களை   பார்த்தோம், ஆண்களில் அதிக குழந்தைகளை பெற்றது யார் என்று பார்த்தால், முதலில் தோன்றுவது, பல பெண்களை மனைவியாக்கி கொள்ளும் பழக்கம் கொண்ட மொராக்கோ நாட்டின் சக்கரவர்த்தியான, மௌலேஷ்க்கு கிடைகிறது. கி.பி. 1703 ம் ஆண்டு வரை இவருக்கு 867 குழந்தைகள் இருந்தன. இதில் 525 மகன்களும் 342 மகள்களும் இருந்தனர். 1721 ம் ஆண்டுக்கு மேல் இவருக்கு எத்தனை குழந்தை பிறந்தது என்று கணக்கில் வைத்து கொள்ளவில்லை என்கிறார்கள். தோராயமாக 1000 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். 

 

     பல மனைவிகள் மூலம் இத்தனை வாரிசுகளை உருவாக்கினார் என்றால், ஒரே மனைவி மூலம் அதிக வாரிசுகளை உருவாக்கிய பெருமை அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் எல்மாஸ்ட் பெறுகிறார். 1992 ம் ஆண்டு அக்டோபர் 15 ல் தனது 96 வது வயதில் இவர் இறக்கும் போது இவருடைய மொத்த வாரிசு 824. தனது 11 மகன்கள் மூலம், 97 பேரன்களும், அவர்களின் மூலம் 634 கொள்ளு பேரன்களும், அந்த கொள்ளு பேரன்களுக்கு 82 எள்ளு பேரன்கள் மூலமாக 824 பேர் வாரிசுகளாக இருந்தனர். இது தான் உலகின் அதிக வாரிசு இருந்ததற்கான சான்று. 


No comments:

Post a Comment