Sunday 31 May 2015

சளித் தொல்லையை விரட்டும் கொய்யா பழம்

நம் ஊர் சீதோஷ்ண நிலையில் நாராக வளரும் கொய்யாப் பழத்தில் 

         விட்டமின்-C சத்து நிறைந்திருக்கிறது. கொய்யாப்பழம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து. அதற்காக இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. வாதம் பித்தம், கபம் போன்றவை அதிகமாகி, மயக்கம் வரலாம்.


  1. வளரும் குழந்தைகள் தினமும் ஓன்று அல்லது இரண்டு கொய்யப் பழங்களை சாப்பிடுவது நல்லது. சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.
  2. கொய்யப் பலத்தை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு, கொட்டைகள் நீக்கிய கொய்யாப் பழத்தை அரைத்து, அதனுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து தோசையாக வார்த்து கொடுக்கலாம்.
  3. ரத்த சோகை இருப்பவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் தினமும் ஒரு கொய்யப் பழத்தை சாப்பிட்டு சூடான தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி 48 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடலில் சக்தி ஏறும்.
  4. சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாலட் போல் செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.
  5. கொய்யா மரத்தின் வேர் மற்றும் பட்டையை சுத்தம் செய்து நசுக்கி, வெந்நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் வாய்ப்புண் குனமடைவதுடன், அது மீண்டும் வராமலும் தடுக்கலாம்.
  6. மா இலையுடன் கொய்யா இலையை காய வைத்து அரைத்து, பல்பொடியாகப் பயன்படுத்தினால், பல்லில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவை குணமாகும்.
  7. மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் ஒரு கொய்யப் பழத்தை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment