Friday 14 August 2015

விஷத்தினால் பாதிப்பு


நமது உடலினுள் செல்லும் பொருள் நமது உடலுக்கோ, உயிருக்கோ தற்காலிகமாக அல்லது, நிரந்தரமாக, ஊறு விளைவிக்குமானால், அது விஷத்தன்மை உடையது என்று பொருளாகும். இந்த விஷம் வாயினால் உட்கொள்வதாலும் (கள்ளச்சாராயம், போலி மருந்துகள்), சுவாசிப்பதாலும் (கார்பன் மோனாக்சைடு), தோலின் மூலமும் (பூச்சிக் கொல்லி மருந்து) ஊசி போன்ற கூர்மையான பொருளால் (பாம்பு விஷம்) உடலினுள் செளுத்தப்படுவதாலும், உயிருக்கு ஆபத்து உண்டாக்குகிறது.

முதலுதவி

  1. என்ன விஷம் உட்கொண்டார், எவ்வளவு அளவு உட்கொண்டார், எவ்வளவு நேரத்திருக்கு முன்பு உட்கொண்டார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.
  2. உடனே மருத்துவ உதவியை நாடுங்கள்.
  3. அவரை வாந்தி எடுக்கத் தூண்டாதீர்கள். அவ்வாறு செய்தால் வாந்தி அவர் சுவாசக் குழாயினுள் சென்று மூச்சுத் திணறல் உண்டாக வழியேற்படும். அவரது உணவுப்பாதையும், குடலும் பாதிக்கப்படும்.
  4. அவர் சாப்பிட்ட விஷத்தையும் வாந்தி எடுத்தாறேன்றால், அவர் வாந்தி எடுத்தபொருளையும் சேர்த்து அவருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள்.

No comments:

Post a Comment