Sunday, 13 August 2017

மூங்கில் மரம் வகையை சேர்ந்தா ?


மூங்கில் என்பது மரமா இல்லை புல்வகையை சேர்ந்ததா என்று கேட்டால் பலரும் மூங்கிலை மரவகையில் சேர்க்கிறார்கள். ஆனால் உண்மையில் மூங்கில் மரவகையை சேர்ந்தது இல்லை. அது புல்வகையை சேர்ந்தது.

மூங்கில் ஒரு நாளைக்கு 16 அங்குலம் என்ற விகிதத்தில் வளர்கிறது. இதனை முழுமையாக வளர விட்டால் 12௦ அடி உயரம் வளரும். இதன் முக்கியமான வேர்த்தண்டுகள் நிலத்தடியில் பதிந்திருக்கும். இவற்றில் இருந்து மூங்கில் கிளைகள் வெளிக்கிளம்பும்.

இதுவரை 5௦௦ விதமான மூங்கில் வகைகளை கண்டு பிடித்துள்ளார்கள். மூங்கிலில் எந்த வகை என்றாலும், அதன் தடிப்பகுதி வழுவழுப்பாகவும் திடமாகவும் இருக்கின்றன. சில மூங்கில்கள் ஆண்டுக்கு ஒரு முறை பயனளிக்கின்றன. சில வகைகள் நூற்றாண்டுகளில் மூன்று, நான்கு முறை பலனளிக்கின்றன.

மூங்கில்கள் வீடுகள், குடிசைகள் கட்டவும், கூரைகள் வேயவும் வரிசையாக சுவர்போல அமைக்கவும், மரங்கள், கூடைகள் செய்யவும் பயன்படுகின்றன. காகிதம் தயாரிக்க மூங்கில், முக்கியமாக தேவைப்படுகிறது. பல நாடுகளில் சமைப்பதற்கும் மூங்கில் குருத்தை பயன்படுத்துகிறார்கள். ஜப்பான் நாட்டில் தோட்டக்கலை நிபுணர்கள் மூங்கிலை நீர்க் குழாயாக பயன் படுத்துகிறார்கள்.

தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் பசிபிக் கடலை சார்ந்த தீவுகளில் மூங்கில் பெருமளவில் வளர்கிறது. சிலவகை மூங்கில்கள் வேர் பகுதியில் வளர்ச்சி ஏற்பட்டு அதில் ஒருவகையான விஷப்பொருள் உருவாகும். இந்த விஷத்திற்கு நல்ல கிராக்கி உள்ளது. சிலவகை மூங்கில்களில் இருந்து சிலிக்கா என்ற பொருள் கிடைக்கிறது. இதுவும் சிறந்த வர்த்தகப் பொருளாக உள்ளது.
 
மூங்கில்தான் தாவர வகைகளில் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு வைத்துக் கொண்டு காற்றைசுத்தப் படுத்துகிறது. மூங்கில் அதிகம் வளர்ப்பதே காற்றை சுத்திகரிக்க இருக்கும் ஒரே வழி!

No comments:

Post a Comment