Sunday 20 August 2017

உலகின் முதல் உயிரினம் எப்படி தோன்றியது தெரியுமா?

 
    ஆஸ்திரேலியா தேசிய பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பண்டைய வண்டல் பாறைகளை ஆயவு செய்து உள்ளனர். இதில் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே விலங்குகளின் பரிணாமங்கள் தொடங்கியது என்பதை கண்டறிந்து உள்ளனர்.

    ஆஸ்திரேலியா தேசிய பல்கலை கழக இணை பேராசிரியர் திரு.ஜோசெப் க்ரோத் அவர்கள், சில விளக்கம் அளித்தார். அதன் அடிப்படையில், இந்த பாறைகளை மிகவும்  பொடி செய்த பிறகு அதிலிருந்து பண்டைய விலங்குகளின் மூலக்கூறுகளை பிரித்து எடுத்தோம். இந்த மூலக்கூறுகள் உண்மையில் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மாறியதாக நமக்கு தெரிவிக்கிறது. இது சுற்று சூழல் புரட்சியாக உள்ளது. இந்த மாற்றம் எழுச்சி பூமியின் வரலாற்றில், மிகவும் ஆழ்ந்த சுற்று சூழல் புரட்சிகளின் ஓன்று என தெரிவித்துள்ளார். மேலும் இது நடப்பதற்கு முன்பு பூமியில் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் வியப்புக்குரிய நிகழ்வு ஓன்று நடந்துள்ளது.

   இது ஒரு பனி பொலிவாக நிகழ்ந்து, பூமியை 50 மில்லியன் ஆண்டுகளாக முடக்கியது. பனி உலகளாவிய அளவில் தீவிரமாக வெப்பம் ஊட்ட பட்ட பொழுது. உருகி ஆறுகளாக ஓடி கடலில் சேர்ந்து ஊட்ட சத்துக்களை உருவாக்கியது. இந்த நிகழ்வின் மூலம் கடலில் மிக அதிக அளவில் ஊட்ட சத்துக்கள் உருவாகின. இது ஆதிக்கம் செலுத்தும் கடல்களில் இருந்து மிகவும் சிக்கலாக வாழ்ந்த உலகிற்கு பாக்டிரியா மூலம் மாற்றப்பட்டது. கடலின் அடிப்பகுதியில் வாழும், பெரிய மற்றும் சத்துள்ள உயிரினங்கள் சிக்கலான மற்றும் சுற்று சூழலுக்கு தேவையான ஆற்றலை வழங்கியுள்ளன.

    அதிகரித்து வரும் பெரிய மற்றும் சிக்கலான விலங்குகள் மனிதர்கள் உட்பட பூமியிலேயே உருவாக முடியும் என என ஜோசப் க்ரோத் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment