Sunday, 13 May 2018

7௦ கோடி சம்பாதிக்கும் 6 வயது சிறுவன்


   பொம்மைகளின் மீதான குழந்தைகளின் காதல் எல்லையற்றது. பொம்மைகளை கொடுத்து விட்டால், நேரம் போவது தெரியாமல் குழந்தைகள் விளையாடி கொண்டே இருப்பார்கள். ஆனால் பொம்மைகளுடன் விளையாடி, ஒரு சிறுவன் 7௦ கோடிக்கு மேல் வருமானம் பெற்றுள்ளான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

   GOOGLE மற்றும் FACEBOOK போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு கூட இந்த வருமானம் கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அமெரிக்காவை சேர்ந்த ரியான் என்னும் 6 வயது சிறுவன், GLOBAL LIST OF FORBES பட்டியலில் 2௦17 ல் அதிகமாக சம்பாதிக்கும் YOUTUBE ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது வேலை என்ன தெரியுமா, தான் விளையாடும் பொம்மைகளுக்கு விமர்சனம் செய்வது தான். FORBES வெளியிட்ட தகவலின் படி, YOUTUBE பிரபலங்களில் அதிகமாக சம்பாதிக்கும் நபர் இவர் தான். ரியான் 11 மில்லியன் டாலர்களை, YOUTUBE ல் பொம்மைகளை விமர்சனம் செய்வது மூலம் சம்பாதித்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 7௦ கோடிகளுக்கும் மேல் ஆகும்.

   அதிகமாக YOUTUBE மூலம் சம்பாதிக்கும் நபர்கள் பட்டியலில் 11 மில்லியன் டாலர்களுடன் 6 வயது சிறுவனான ரியான் உலக அளவில் 8 வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. இவருக்கு சொந்தமாக YOUTUBE ல் RYAN TOYS REVIEW என்று CHANNEL இருக்கிறது. தனது RYAN TOYS REVIEW சேனல் மூலம் ஒவ்வொரு பொம்மைக்கும், விமர்சனம் கூறி பதிவிடுகிறார் ரியான். குழந்தைகளுக்காக புதியதாக வரும் பொம்மைகளை விளையாடி பார்த்து, அதனை தன்னுடைய மழலை குரலில் விமர்சனம் செய்கிறார் ரியான். ரியானுக்கு பொம்மைகள் என்றால் மிகவும் பிரியம்.

   சிறுவர் விளையாடும் பொம்மைகளுக்கு சிறுவனே விமர்சனம் செய்யும் அழகு மிகவும் அருமையானதே. சிறுவன் ரியான் நடத்தி வரும் சேனலுக்கு மொத்தம் 1௦ மில்லியன் சந்தாதாரர்கள் இருகின்றனர். பெரும்பாலும் சிறுவன் விமர்சனம் செய்து பதிவிடும் வீடியோக்கள் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது 5 லட்சம் நபர்கள் பார்த்து விடுகின்றனர். ஒரு சில நாட்களில் YOUTUBE ட்ரென்ட் லிஸ்ட்ல் இடம் பெற்று, தனது வீடியோகளுக்கு ஒரு மணி நேரத்திலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்றுவிடுகிறார் சிறுவன் ரியான்.

   6 வயதிலேயே தனது தனித் திறமைக்காக 7௦ கோடி சம்பாதிக்கும் ரியானை கண்டு உலகமே வியக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment