Tuesday 15 May 2018

உலகத்திலேயே அதிக நாட்கள் தூங்கும் மக்கள்


    KAZAKHSTAN-ல் உள்ள ஒரு சின்ன கிராமம் தான் KALACHI. 6௦௦-க்கும் அதிகமான நபர்கள் மட்டுமே வாழ்ந்துவரும் இந்த கிராமத்தில் ஒரு வினோதமான நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோயின் விளைவால் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் எதிர்பாராத நேரத்தில் திடீர்னு தூங்க ஆரம்பித்தார்கள். இப்படி தூங்க ஆரம்பித்தவர்கள் நாட்கள் கணக்கில் மட்டும் அல்லாமல் சில சமயம் வாரக்கணக்கில் கூட தூங்க ஆரம்பித்தார்கள்.
  இந்த வினோதமான நோயால் இதுவரைக்கும் 1௦௦ க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். கடையாக கடந்த செப்டம்பர் மாதம் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆரம்பமான முதல் நாளில் 8 முதல் 20 குழந்தைகள் வரை மயங்கி விழுந்து, பின்னர் சில நாட்கள் கழித்துதான் எழுந்ததாகவும் அங்குள்ள செவிலியர் ஒருவர் தெரிவித்தார்.
   இப்படி இந்த வியாதியால் பாதிக்கப்பட்ட பல பேருக்கு தூக்கத்தில் இருந்து எழுந்த பின்னர் MEMORY LOSS சம்மந்தமான நோய்களுக்குண்டான அறிகுறிகள் தென்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சரியான மருத்துவ சிகிச்சைக்கு பிறகுதான் அவர்கள் சகஜ நிலைக்கு திரும்புவதாகவும் தெரிவிகின்றனர். பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு இதற்கான காரணத்தை தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.
  அந்த காரணம் என்னவென்றால், பல வருடங்களுக்கு முன்னாள் ரஷ்யா  அணு உலை மற்றும் அணு ஆயுதங்களில் பயன்படுத்தக் கூடிய யுரேனியம் உள்ளதை கண்டுபிடித்தார்கள். பின்னர் சுரங்க பாதைகள் அமைத்து யுரேனியத்தை எடுத்தார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் யுரேனியம் எடுப்பதை நிறுத்திவிட்டனர். பின்னர் சமிபத்தில் நடத்திய சோதனையில் 268 மைக்ரோ ராஞ்சன் என்கிற அளவுக்கு கதிர்வீச்சு வெளிபடுவதாக கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக இந்த சுரங்கத்தின் அருகில் உள்ள KALACHI என்கிற கிராமம் பாதிக்கப்படுள்ளதாக உறுதி செய்யப்பட்டது.
  இந்த ஆபத்தில் இருந்து KALACHI கிராம மக்களை காப்பாற்ற அந்த நாட்டு அரசு, KALACHI கிராம மக்களுக்கு மாற்று இடத்தில் குடியேற வழிவகை செய்தனர். இந்த சம்வத்தின் மூலம், அணு ஆராய்சிகளில் பயன்படுத்தபடுகின்ற எந்த ஒரு மூல பொருளாளையும் நன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவுதான் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment