Sunday 17 June 2018

பூமியை சுற்றி அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள்


   சமீப ஆண்டுகளாக பூமியை சேர்ந்த விண்வெளி பகுதியில் விண்வெளி குப்பைகள் அதிக அளவில் சேர ஆரமித்துள்ளது. இவற்றை சுத்தம் செய்வதற்கான வழியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

   உலகத்தில் இருக்கும்  ஒவ்வொரு நாடும் தங்களுடைய தொழில் நுட்ப வசதிகளை மேம்படுத்தவும், தங்களுடைய நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் பல ஆராய்ச்சிகளுக்காக ஒவ்வொரு வருடமும் பல செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய வண்ணம்  உள்ளனர். அப்படி அனுப்பப்படும் செயற்கை கோள்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரைதான் செயல்படும். அப்படி செயல்பாடு முடிந்த உடனே SPACE RUBBISH என அழைக்கப்படும் குப்பையாக மாறி அந்த செயற்கைகோள்  எந்த சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டதோ அந்த சுற்று வட்ட பாதையிலேயே தொடர்ந்து பூமியை சுற்றி வர ஆரம்பிக்கும்.

    ப்படி இந்த குப்பைகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து 2016 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 16,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களும் அதனுடைய  பாகங்களும் அதிகமான வேகத்தில் பூமியை சுற்றி வருவதாக கணக்கிப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதன் அளவு பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் விண்வெளி பயணங்களுக்கும், விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகளுக்கு மிகப்பெரிய தடையாக அமைய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்த விண்வெளி குப்பைகளை அப்புறப்படுத்த எந்த ஒரு செயல்படுத்தக் கூடிய வழிமுறைகளும் கண்டுபிடிக்கப்படாமலேயே  இருந்தது.

   தற்பொழுது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த UNIVERSITY OF TOULOUSE சேர்ந்த எமலியன் ஸபடியேற் என்ற விஞ்ஞானி ஒரு வழிமுறையை முன்வைத்துள்ளார். எமலியனின் வழிமுறையின்படி மின்காந்த அலைகளின் உதவியுடன் பழுதடைந்து விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் அனைத்தையும் பூமிக்கு இழுக்கவோ அல்லது சுற்று வட்ட பாதையில் இருந்தோ அல்லது பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்தோ அப்புறபடுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயல் முறையை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல எனவும் கூறியுள்ளார்.

   இந்த செயல் முறை பற்றிய ஆராய்ச்சி இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளதாக எமலியன் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சி வெற்றியும் அடையலாம் அல்லது தோல்வியும் அடையாளம். இதற்கான ஒரு சாதனம் உருவாக்கும் பட்சத்தில்  அது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை

No comments:

Post a Comment