Sunday 23 February 2020

மர செக்கு எண்ணையின் பயன்கள்

 
    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குளிர் நேரங்களில் தேங்காய் எண்ணெய் உரை நிலைக்கு சென்று விடும். காரணம் தேங்காய் எண்ணையின் உறைநிலை திறன் மற்ற எண்ணைகளை விட அதிகம். ஆனால் இன்றைய காலத்தில் ஒரு சதவீத அளவு வீடுகளில் கூட, தேங்காய் எண்ணெய் உறை நிலைக்கு மாறவில்லை. குளிர் குறைந்ததா இல்லை எண்ணையின் தரம் குறைந்ததா.

    பொதுவாகபெண் குழந்தைகள் பருவம் அடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை கலியாக கிளறி அதில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள். தற்பொழுது இந்த பழக்கம் வழக்கத்திலும், செக்கு என்னை அதிக புலக்கத்திலும் இல்லை. ஒரு தூக்கு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எண்ணெய் வாங்க செக்கு ஓட்டும் இடத்துக்கு சென்று உடலுக்கு கேடு தராத எண்ணெய்களை பயன்படுத்திய காலம் இன்று மறைந்து போனது. நம் கலாச்சாரத்தில் உண்ணும் உணவிற்கு எண்ணெய் முக்கிய பொறுப்பு வகுக்கின்றது.

    செக்கு எண்ணெய்க்கும், நாம் தற்பொழுது பயன்படுத்தும் நல்ல எண்ணெய்க்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள். இரும்பு உலக்கைகளை கொண்டு எல்லை ஆட்டி, எண்ணையை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நெல்லெண்ணையில் சில சத்துக்கள் குறைந்துவிடும். செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். இதனால் இதன் உயிர் சத்துக்கள் அதன் தன்மையை இழப்பதில்லை. மரசெக்கில் அதிக அளவு வெப்பம் ஏற்படாது, அப்படி ஏற்பட்டாலும், அதில் கலந்து இருக்கும் கருப்படி வெப்ப நிலையை சரி செய்துவிடும். இதுவே நம் உடலுக்கு நன்மை பயக்கும் எண்ணெய்.

     இதனால் இப்படி மரசெக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் எண்ணைக்கு ஒரு நல்ல மனமும், குணமும் இருப்பது இயற்கையே. இந்த மர செக்கு எண்ணையில் பலகாரங்கள் செய்தால், அதன் மனமும் ருசியும் அபாரமாக இருக்கும். உணவே மருந்து என்று புரிந்து அவ்வழி வாழ்ந்து உடல் நிலை சிறந்து நோய் துறந்து வாழ்ந்த நம் முன்னோர் வழி மறந்ததால், அன்று 80 வயதில் வந்த நோய் இன்று 30 வயதில் வரும் நிலையை அடைந்துவிட்டோம்.

     சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்றாலும், இதில் செக்கு எண்ணையை விட நன்மைகளும், சத்துகளும், குறைவு தான். செக்கு எண்ணையின் பயன்கள் தெரியுமா, நெல்லெண்ணைய் - ஆரோக்கிய இதயம், நீரிழிவு சரிப்படும், வலுவான எலும்புகள், ரத்த அழுத்தம் குணமாகும், உடல் சூடு குறையும், இன்னும் பல. தேங்காய் எண்ணெய் - சருமம் மற்றும் தலைமுடிக்கு சிறந்தது, இதயத்தை இயல்பாக இயங்க வைக்கும், புண்கள், காயங்கள் சீக்கிரம் ஆறும், உடல் குளிர்ச்சி அடையும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும், கடலை எண்ணெய் - முதியோர்கள் பயன்படுத்த ஏற்றது, மூட்டுவலி குணமாகும், முதுமை தோற்றம் எளிதில் வராமல் தடுக்கும், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது, B காம்ப்ளெக்ஸ் வைட்டமினான போலிக் அமிலமாகும். அதனால் போலிக் அமில குறைபாடு இருந்தால், ஹிமொ கிலோபின் அளவு தானாகவே குறைந்துவிடும். கடலை எண்ணையை உணவில் பயன்படுத்தி கொள்ளும் போது உடலுக்கு தேவையான போலிக் அமிலம் பூர்த்தி ஆகிவிடும்.

     நம் கண்முன்னே தரமான மூலபொருட்களை செக்கில் அரைத்து அதை வடிகட்டி பாத்திரத்தில் வாங்கி சமைத்து உண்ணும் உணவுவே மருந்து எங்கிருந்து வருகிறது எவ்வாறு தயாரிக்கபடுகிறது. இந்த எண்ணையை பயன்படுத்தினால் என்ன விளைவு வரும். என்று எதுவும் அறியாமல் பயன்படுத்துவது, உடல் ஆரோக்கியத்தை குறைக்கும். விலை சற்று அதிகம் என்று பாராமல் நம் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் செக்கு எண்ணையை பயன்படுத்த தொடங்குவோம்.

No comments:

Post a Comment