Monday 24 February 2020

மதுரை தெப்பக்குளத்தின் உண்மையான வரலாறு


    வரலாறுகள் நிறைந்து வாழும் நகரம் மதுரை. கட்டிட கலைகளாலும், கட்டபட்டதின் காரணங்களாலும், என்றும் கம்பீரமாக நிலைத்திருக்கும் இதன் வரலாறு. அப்படி ஒரு வரலாற்றின் காரணம், பல கற்பனைக்குள் சிக்கி, அடுத்த தலைமுறைக்கு அது கட்டுகதைகளாக வெளிவரும். அப்படி ஒரு வரலாறு தான் மதுரை தெப்பக்குளத்தின் வரலாறு. பல கதைகள் உலவி வந்தாலும். மக்களிடையே இந்த தெப்பகுளத்தை பற்றி அதிகமாக வளம் வரும் ஒரு கதை ஓன்று இருக்கிறது.

    மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர். அவருக்கு அரண்மனையை கட்டுவதற்கு மண் தேவை பட்டதால், ஒரு இடத்தை தோண்டி மண் எடுத்த பின் அந்த இடம் குழியாக இருந்ததால், அதை சீரமைக்க தெப்பம் கட்டியதாக இன்றளவும் பேசப்படும் ஒரு கதை உண்டு. இது மக்கள் மத்தியில் நிலவி வரும் கதை மட்டுமே. ஆனால் உண்மையான வரலாறு வேறு.

    மன்னர் திருமலை நாயக்கர் மதுரையை தலை நகராக தேர்வு செய்து ஆட்சி செய்ய முற்பட்டார். கட்டிட கலையின் மீது காதல் கொண்ட திருமலை நாயக்கர் மதுரையை தலை நகராக ஏற்ற உடனேயே, மதுரையில் ஒரு அரண்மனையும் தெப்பகுளமும் கட்ட திட்டமிட்டார். மதுரை வைகை ஆற்றின் கறையான வண்டியூர் பகுதியை தேர்வு செய்த அவர், அங்கு தெப்பகுளத்தை கட்ட திட்டமிட்டார். ஆயிரம் அடி நீளத்துடன் 950 அடி அகலத்துடன் சதுர வடிவில் 16 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது இந்த தெப்பகுளம். இந்த தெப்பகுளத்துக்கு நடுவே மைய்ய மண்டபம் உருவாக்கப்பட்டது. அதை சுற்றி தோட்டம் போல், மரங்கள் நிறைந்து அதன் நடுவே எழில் மிகு கட்டிட கலையுடன் மைய்ய மண்டபம் கட்டப்பட்டது.

    வெளி பார்வைக்கு பல்லவர் கட்டிட கலையின் மாமல்லபுரம் கற் கோவிலின் அமைப்பிலும், உள்ளே முகலாயர்களின் கட்டிட கலையிலும் கட்டப்பட்டது இந்த மதுரை தெப்பக்குளத்தின் மைய்ய மண்டபம். இந்த மைய்ய மண்டபத்தின் மற்றொரு சிறப்பு, இதன் விமானத்தின் நிழல் தண்ணீரில் விழாத அளவுக்கு கட்டியமைத்தனர். அந்த மண்டபத்தின் சுற்று சுவர் தாண்டி இதனின் நிழல் தண்ணீரில் விழாது. ஒவ்வொரு திசையிலும் மூன்று படித்துறைகள் எழுப்பி 12 படிதுரைகளுடன் உருவாக்கப்பட்டது இந்த தெப்பகுளம். கிட்டத்தட்ட 20 அடி ஆலமும் 115 கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த தெப்பகுளம், 1635 -ல் கட்டி முடிக்கப்பட்டது இந்த தெப்பகுளம். நீராதாரத்தை வலுபடுத்தவே இந்த தெப்ப குளமானது கட்டப்பட்டது. 

     வைகை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் இணைப்பை ஏற்படுத்தி இந்த தெப்பகுளத்தை தண்ணீரால் நிரப்பி வந்தனர். இதை சிறபிக்கும் வகையில் எண்ணிய திருமலை நாயக்கர். இந்த தெப்ப குளத்தின் திறப்பு விழா, ஒரு சிறப்பு விழாவாக இருக்க வேண்டும் என எண்ணினார். தான் பிறந்த தினமான தை பூச நாள் அன்று. இந்த தெப்பகுளத்தை திறந்து வைத்து மதுரை மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தெப்பத்தில் எழுந்தருளி வளம் வர செய்தார் திருமலை நாயக்கர். இன்றளவும் மதுரை மக்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வரும் தெப்ப திருவிழா மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த தினத்தையும் திருவிழா கோலமாக கொண்டாடும் விதமாக விளங்குகிறது. 

திருவாருர், மன்னார்குடிக்கு அடுத்து தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பகுளம் இந்த மதுரை தெப்பகுளம் தான் மதுரையின் அழகில் மேலும் அழகு சேர்க்கும் இந்த தெப்பகுளம் மதுரையின் முக்கிய அடையாளமாகவும், சுற்றுலாதளமாகவும் விளங்குகிறது. 1635முதல் இன்று வரை 385 ஆண்டுகளாக கம்பீரமாக கட்டிட கலையிலும், நீராதரத்தின் சேமிப்புக்கும் கட்டப்பட்ட இந்த தெப்பக்குளம். மதுரையின் அழகையும், பிரமாண்டத்தையும், வரலாறையும் சுமந்து அழகாய் மிதந்து வரும் என்றும் என்றென்றும்.

No comments:

Post a Comment