Monday 2 March 2020

காபி குடிப்பது நல்லதா கெட்டதா ?


    காலையில் காபியில் கண் விழித்தால்தான் பலருக்கும் பொழுதே விடிந்தது போல இருக்கும். காபி குடிப்பது நல்லதா இல்லை கெட்டதா என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், காபி பிரியர்கள் இல்லாத வீடே கிடையாது. சோம்பலை போக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், தலைவலியை போக்கவும் என பலவிதமான காரணங்களுக்காக காபி குடிப்பவர்கள் உண்டு. இன்றோ காபி குடிப்பது என்பது ஆரோக்கிய சூழலை தாண்டி அரட்டை போல் அது ஒரு வழக்கமாகிவிட்டது.

    நகர்ப்புறங்களில் விதவிதமாக தோன்றும் காபி "ஷாப்" களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். சூடான காபி, குளிரான காபி, வரக்காபி என காப்பிகளில் பலவிதங்கள் வந்துவிட்டன. இந்த காபி புராணம் எதற்கு என்று தானே நினைக்கிறீர்கள்.

காரணம் இருக்கிறது.

  காபி குடிக்கவும் உகந்த நேரம் இருக்கிறது. என்பதே ஆராய்ச்சியாளர்களின் பதில். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஸ்டிபன் மில்லர் என்ற ஆராய்ச்சியாளர் காபியை பற்றி மெஹா ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார்.

    அந்த ஆய்வின் முடிவில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை காபி குடிப்பது நல்லது அல்ல என்று அவர் கூறி இருக்கிறார். அன்றாட நடவடிக்கைகளுக்காக நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவற்றில் ஓன்று கார்ட்டிசால். இந்த ஹார்மோன் தான் நமது சுறுசுறுப்புக்கும் விழிப்புணர்வுக்கும் காரணம். இந்த ஹார்மோன் காலை 8 மணி முதல் 9 மணி வரைதான் சுரக்குமாம்.

    அந்த நேரத்தில் நம்முடைய நாளை சுறுசுறுப்பாகத் தொடங்க காபி குடிப்பது வீணாகிவிடும். அந்த சுரப்பை இன்னும் அதிகப்படுத்திவிடும். என்று கூறியுள்ளார். கார்ட்டிசால் சுரப்பு மிகவும் குறைவாக இருக்கும் நேரணமான காலை 9.30 - 11.30 மணிக்குள்ளும், மாலை 1.30 - 5.00 மணிக்குள் காபி குடித்தால் பிரச்சனை இல்லை என மில்லர் கூறி இருக்கிறார்.

    இந்த ஆராய்ச்சி முடிவை ஏற்பதா இல்லையா என்ற குழப்பம் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தது. இந்நிலையில் தான் காபி ஆய்வை மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார் மில்லர். இதன் பிறகு காபி பிரியர்கள் பலரும் காபி குடிக்கும் நேரத்தை மாற்ற தொடங்கி விட்டார்கள். 

No comments:

Post a Comment