Friday 7 February 2020

மகளின் உணர்வு அறிந்து குளம் வெட்டிய மன்னர்


    கி.பி 14ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை பகுதியில் ஆட்சி செய்த சிற்றசு பெயர் தான் சின்னையன். இவருக்கு ஒரு அழகான மனைவி இருந்தாள். இந்த அரச தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்பு இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி பொங்க சென்றுகொண்டிருந்த வேளையில் அரசனின் மனைவி திடீரென இறந்து விட்டார்.

    தாய் இல்லாமல் வளர்ந்து கொண்டு இருந்த அரசனின் மகள், சில ஆண்டுகளுக்கு பிறகு பருவம் அடைந்தாள். பருவம் அடைந்த சில மாதங்களில் பக்கத்து நாட்டு இளவரசருக்கு விவாகம் செய்து வைக்க முடிவு செய்து, அதன்படி சில நாட்களில் திருமணமும் நடந்து முடிந்தது. திருவண்ணாமலை பகுதியே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. 

    அனைத்தும் நல்ல முறையில் சென்று கொண்டு இருந்த நேரத்தில், திருமணம் முடிந்த ஒரு வாரத்திருக்கு பிறகு, பக்கத்து நாட்டு இளவரசர் சின்னனையன் அரசரை சந்திக்க அவருடைய மகளுடன் வருகிறார். அரசர் சின்னையனை சந்தித்து, தங்களுடைய மகளுக்கு என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பம் இல்லை என்கிறாள், அவள் எப்பொழுது விரும்புகிறாளோ, அப்பொழுது அனுப்பி வைக்கவும், என்று கூறி சென்று விட்டார்.

     இதனால் அதிக மன உலைசளுக்கு உள்ளானஅரசன் சின்னையன், உடனே அமைச்சரவையை கூட்டி தனக்கு நடந்த துயரத்தை கூறினார். ஒவ்வொரு அமைச்சர்களும் பலவிதமான யோசனைகளை கூறினாலும், அரசர் திருப்தி அடையவில்லை. அரசர் சுயமாக ஒரு யோசனை செய்து, தன் மகள் குளிப்பதற்காக ஒரு குளத்தை வெட்டினார். அந்த குளத்தின் உட்புற சுவற்றில், மனிதர்கள் தாம்பத்தியத்தில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்று மட்டும் இல்லாமல் விலங்குகளும் இனப்பெருக்கத்தில் எவ்வாறு ஈடுபடுகின்றது. என்பதை சிற்பமாக வடித்து வைக்க முடிவு செய்து, அதன்படி குளத்தையும் வடிவமைத்தார்.

    அதன்பிறகு அரண்மனை பெண்களிடம், தன்னுடைய மகளை, தான் வெட்டி வைத்த புதிய குளத்தில் குளிக்கவைத்து, குளத்தை சுற்றி உருவாக்கி உள்ள சிற்பங்களை பார்வையிட பணித்தார். அதன்படி அரண்மனை பெண்களும் அரசரின் மகளை அழைத்து வந்து குளிக்க வைத்து, அங்குள்ள சிற்பங்களை பார்வையிட செய்தனர். சிற்பங்களை பார்வையிட்ட அரசரின் மகளுக்கு, மனம் மாறுதல் ஏற்பட்டு தான் கணவர் நாட்டு செல்ல விரும்புவதாக அரசன் சின்னையனிடம் முறையிட்டார். மகிழ்ச்சி அடைந்த அரசர் மகளை வழியனுப்பி வைத்தார். அதன்பிறகு மகளுக்கு சில நாட்களில் குழந்தையும் பிறகிறது.

     எதற்காக அரசன் சின்னையன் இந்த மாதிரி குளம் வெட்டினார் என்றால், தன் பெண் போல அம்மா இல்லாமல் வளர்ந்த பெண்களுக்கு அப்பா சில விஷயங்களை கூறமுடியாது. அதனால், தனக்கு நடந்தது போல பின்வரும் சந்ததியினருக்கு நடக்க கூடாது என்பதற்காக தான் இது போன்ற குளத்தை உருவாக்கியுள்ளார். இன்றும் கூட, திருவண்ணாமலை மாவட்டத்தில் சின்னையன் பேட்டைஎன்ற ஊரில் இந்த குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment