Wednesday 12 May 2021

பெட்ரோலை மிக மிக குறைந்த விலைக்கு விற்கும் நாடுகள்


       நமது நாட்டில் ஒருலிட்டர் பெட்ரோலின் விலை மலைக்க வைக்கும் அளவுக்கு விலை உயர்வாக உள்ளது. ஆனால் உலகின் சில நாடுகள் பெட்ரோலை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. குறிப்பாக சில நாடுகளில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை காட்டிலும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை குறைவாக உள்ளது. 
 

  வெனிசுலா : வெனிசுலா நாட்டில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் இருக்கிறது. அந்நாட்டின் அபரிமிதமான, இயற்கை வளமாக இருக்கும் எண்ணையை உலகெங்கும் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு கிடைகிறது. அதாவது வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய Rs.1.45க்கு விற்கபடுகிறது.

 


 ஈரான் : கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில் ஈரான் நாட்டில் சுமார் 15,753 கோடி பேரல்கள் அளவுக்கு என்னை வளம் இருப்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது. என்னை வளத்தில் ஈரான் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் மொத்த எண்ணெய் வளத்தில் 9.5 சதவிகிதம் ஆகும். ஈரான் பொருளாதாரத்தில் எண்ணெய் ஏற்றுமதி முக்கிய பங்கு வகுக்கிறது. ஈரான் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை Rs.18.30க்கு விற்கபடுகிறது.

 

குவைத் : எண்ணெய் வளத்தில் உலகின் 6 வது இடத்தில் இருக்கும் குவைத்தில் 10,150 கோடி பேரல்கள் அளவுக்கு எண்ணெய் வளம் இருப்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது. இது உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 6.1 சதவீதம் ஆகும். குவைத்தின் பொருளாதாரம். எண்ணெய் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய Rs.25.30க்கு விற்கபடுகிறது. 

 

அல்ஜீரியா : உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும் அல்ஜீரியாவில் சுமார் 1,200 பேரல்கள் அளவுக்கு எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. சர்வதேச எரிவாயு மற்றும் எண்ணெய் சந்தையில் அல்ஜீரியா மிகப்பெரிய பங்கு வகுக்கிறது. ஆப்ரிக்காவின் முன்னணி ஏற்றுமதியாளராக இருக்கும் அல்ஜீரியா சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. அல்ஜீரியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை Rs.25.39க்கு விற்கபடுகிறது.

 

சூடான் : 2016 ஆம் ஆண்டு ஆய்வின்படி, சூடான் நாட்டில் கிட்டத்தட்ட 500 கோடி பேரல்கள் அளவுக்கு எண்ணெய் வளம் இருக்கிறதாக கண்டுபிடிக்கபட்டுள்ளது. எண்ணெய் வளத்தில் சூடான் உலகளவில் 23 வது இடத்தில் உள்ளது. சூடானின் பொருளாதாரம் எண்ணெய் உற்பத்தியை அடிப்படையாக கொண்டது. அந்நாட்டின் ஏற்றுமதி தொழிலில் எண்ணெய் வர்த்தகமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  1999 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் ஏற்றுமதியை செய்து வரும் சூடானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஏறக்குறைய Rs.29.85க்கு விற்கபடுகிறது.

 

நைஜீரியா : கடந்த 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 3,707 பேரல்கள் அளவுக்கு எண்ணெய் வளம் கண்டுபிடிக்க பட்டுள்ளது. எண்ணெய் வளத்தில் இந்த நாடு உலகளவில் 10 இடத்தில் இருக்கிறது. நைஜீரியாவின் எண்ணெய் வளம் 1956 ஆம் ஆண்டு முதல் முதலாக கண்டுபிடிக்கபட்டது. பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் நைஜீரியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் Rs.31.17க்கு விற்கபடுகிறது. 

 

துர்க்மேனிஸ்தான் : துர்க்மேனிஸ்தான் நாட்டில் சுமார் 60 கோடி பாரல்கள் அளவுக்கு எண்ணெய் வளம் உள்ளது. இந்த நாடு எண்ணெய் வளத்தில் உலகளவில் 43 வது இடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்புகள் துர்க்மேனிஸ்தானில் காணபடுகின்றன. இயற்கை எரிவாயு உற்பத்தியை பொறுத்தவரை உலகில் 20வது இடத்தில் இருக்கும் துர்க்மேனிஸ்தானில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை Rs.31.31க்கு விற்கபடுகிறது.

 

ஈக்குவடோர் : ஈக்குவடோர் நாட்டில் 827 கோடியே 30 லட்சம் பேரல்கள் அளவுக்கு எண்ணெய்வளம் உள்ளது. இந்த நாடு எண்ணெய் வளத்தில் உலகின் 19 வது இடமாகும். ஈக்குவடோர் நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் எண்ணெய் வளத்தை ஏற்றுமதி செய்வதையே சார்ந்துள்ளது. 3 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும், 3 எண்ணெய் வடிகட்டுதல் ஆலைகளும் கொண்டிருக்கும் ஈக்குவடோர் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஏறக்குறைய Rs.33.95க்கு விற்கபடுகிறது. 

 

சவூதிஅரேபியா : எண்ணெய் வளத்தில் வெனிசுலாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில் 26,657 கோடியே 80 லட்சம் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் வளம் இருகின்றது. இது உலக எண்ணெய் வளத்தில் 16.2 சதவீதம் ஆகும். மிகப்பெரிய என்னை வர்த்தகத்தை சார்ந்துள்ள சவூதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஏறக்குறைய Rs.34.09 க்கு விற்கபடுகிறது. 

 

எகிப்து : எகிப்தில் சுமார் 440 கோடி பேரல்கள் அளவுக்கு எண்ணெய் வளம் இருக்கின்றது. எண்ணெய் வளத்தில் இந்த நாடு உலகளவில் 25வது இடத்தில் இருக்கிறது. 20ஆம் நூற்றாண்டில் முதல் சகாப்தத்தில் கச்சா எண்ணையின் கணிசமான அளவு, எகிப்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது எகிப்து உலகின் மிக முக்கியமான எரிவாயு உற்பத்தியாளர்களின் ஒன்றாக மாறியுள்ளது. மேற்கு பாலைவனம் மற்றும் நைல் டெல்டா பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை கொண்டிருக்கும் எகிப்தில் ஒரு லிட்டரின் பெட்ரோலின் விலை Rs.39.73 க்கு விற்கபடுகிறது.

 

சரி, இந்தியாவில் எண்ணெய் வளமே இல்லையா என்றால், நிச்சமாக உள்ளது. இந்தியாவில் சுமார் 473 கோடி பேரல்கள் அளவுக்கு எண்ணெய் வளம், குஜராத், ராஜஸ்தான், மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் வளத்தில் இந்த மதிப்பு உலகளவில்  24 வது இடமாகும். இருப்பினும் இங்கு பெட்ரோல் விலை பிற நாடுகளோடு ஒப்பிடும் பொது மிக அதிகமாக இருக்க முக்கிய காரணம் மக்கள் தொகையாகும். இங்கு எண்ணெய் உற்பத்தியை காட்டிலும் தேவை மிக அதிகமாக் இருப்பதால், பற்றாக்குறையை சமாளிக்க பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது. மேலும் எண்ணெய் விலையோடு, வரிகள் டீலர் கமிசன்கள் போன்றவையும் சேர்ந்துகொள்ள. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் Rs.90 க்கு மேல் விற்பனை செய்கிறது.

1 comment:

  1. Tioga Gold - Titanium Soccer Betting Tips and Predictions
    Tioga Gold is one of the leading CS:GO titanium properties betting sites in how to get titanium white octane the world. This one titanium drill bits is very titanium pots and pans good for esports betting and many titanium trim as seen on tv others.

    ReplyDelete