Monday 15 August 2022

எவ்வளவு மதுபானம் அருந்தினால் சட்டப்படி வாகனத்தை இயக்கலாம்

 

      MOTOR VEHICLE ACT 1988 - SECTION 185, 202 சட்டப்படி வாகனம் செலுத்தும் போது, நமது 100மில்லிகிராம் ரத்தத்தில் 30mg ஆல்ககால் இருந்தாலே, காவல் துறை எந்தவித வாரண்டும் இல்லாமல் அரஸ்ட் செய்யலாம். அது மட்டும் இல்லாமல் ஆல்ககால் டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் போது, நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், காவல்துறை நம்மை அரஸ்ட் செய்யும். நாம் மது அருந்தியது உறுதி செய்யும் பட்சத்தில் முதல் முறைக்காக ரூபாய் 10,000 அபராதமும் மற்றும் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனையும் கிடைக்கும். அதே குற்றத்திற்காக மீண்டும் பிடிபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் அல்லது ரூபாய் 15,000 அபராத தொகையாக பெறப்படும்.

 

      SECTION 128ன் படி TRAFFIC போலீஸ் நமது வாகனத்தின் சாவியை எடுத்தாலும் அது சட்டபடி குற்றமாகும். அப்படி சாவியை எடுத்தும் செல்லும் அதிகாரி மீது வழக்கு தொடரவும் நமக்கு முழு உரிமை உள்ளது.

 


      2006 ஆண்டு அறிமுகபடுத்தபட்ட AUTOMOTIVE AMENDMENT BILL - 2006 -ன் படி, தலைகவசம் அணியாமல் சென்றதற்காக அவதாரம் செலுத்தி இருந்தாலோ, அல்லது வேற எதாவது ஒரு காரணத்திற்காக அவதாரம் செலுத்தி இருந்தாலோ, மீண்டும் அதே நாளில் அதே காரணத்திற்காக அவதாரம் செலுத்த தேவையில்லை.

No comments:

Post a Comment